ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

ஐங்குறுநூறு - 28. குரக்குப் பத்து

ADVERTISEMENTS

அவரை அருந்த மந்தி பகர்வர்
பக்கின் தோன்றும் நாடன் வேண்டின்
பல்பசுப் பெண்டிரும் பெறுகுவன்
தொல்கேள் ஆகலின் நல்குமால் இவட்கே.
271
ADVERTISEMENTS

கருவிரல் மந்திக் கல்லா வன்பறழ்
அருவரைத் தீந்தேன் எடுப்பை அயலது
உருகெழு நெடுஞ்சினைப் பாயும் நாடன்
இரவின் வருதல் அறியான்
வரும் வரும் என்பள் தோழியாயே.
272
ADVERTISEMENTS

அத்தச் செயலைத் துப்புறழ் ஒள்தளிர்
புந்தலை மந்தி வன்பறழ் ஆரும்
நன்மலை நாட நீசெலின்
நின்நயத்து உறைவி என்னினும் கழில்மே.
273

மந்திக் கணவன் கல்லாக் கொடுவன்
ஒன்கேழ் வயப்புலி குழுமலின் வைரைந்துடன்
குன்றுயர் அடுக்கம் கொள்ளும் நாடன்
சென்றனன் வாழி தோழியென்
மெல்தோள் கவினும் பாயலும் கொண்டே.
274

குரங்கின் தலிஅவன் குருமயிர்க் கடுவன்
சூரலஞ்ச் சிறுகோல் கொண்டு வியலறை
மாரி மொக்குள் புடைக்கும் நாட
யாம்நின் நயத்தனம் எனினும்எம்
ஆய்நலம் வாடுமோ அருளுதி எனினே.
275

மந்திக் காதலன் முறிமேய் கடுவன்
தண்கமழ் நறைக்கொடி கொண்டு வியலறைப்
பொங்கல் இளமழை புடைக்கும் நாட
நயவாய் ஆயினும் வரைந்தனை சென்மோ
கன்முகை வேங்கை மலரும்
நன்மலை நாடன் பெண்டெனப் படுத்தே.
276

குறவர் முன்றில் மாதீண்டு துறுகல்
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
குன்ற நாடநின் மொழிவல் என்றும்
பயப்ப நீத்தல் என்இவள்
கயத்துவளர் குவளையின் அமர்த்த கண்ணே.
277

சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல்
குரங்கின் வன்பரழ் பாய்ந்தன இலஞ்சி
மீனெறி தூண்டிலின் நிவக்கும் நாடன்
உற்றோர் மறவா நோய்தந்து
கண்டோர் தண்டா நலங்கொண் டனனே.
278

கல் இவர் இற்றி புல்லுவன எறிக்
குளவி மேய்ந்த மந்தி துணையோடு
வரைமிசை உகளும் நாட நீவரின்
கல்லகத் ததுஎம் ஊரே
அம்பல் சேரி அலராம் கட்டே.
279

கருவிரல் மந்திக் கல்லா வன்பார்ப்பு
இருவெதிர் ஈர்ங்கழை ஏறிச் சிறுகோல்
மதிபுடைப் பதுபோல தோன்றும் நாட
வரைந்தனை நீஎனக் கேட்டுயான்
உரைத்தனென் அல்லனோ அதென் யாய்க்கே.
280